விஸ்வேஸ்வரர்-வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
திருப்பூர்:
திருப்பூரில் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தேர்த்திருவிழா
திருப்பூரில் புகழ்பெற்ற விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ந் தேதி பூத வாகனம், அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. 5-வது திருநாளான வருகிற 10-ந் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
7-வது திருநாளான 12-ந் தேதி காலை 5 மணிக்கு விஸ்வேஸ்வரசாமி கோவில் சாமி தேருக்கு எழுந்தளும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. தொடர்ந்து ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 8-ம் திருநாளான 13-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு வீரராகவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெறும். 14-ந் தேதி மாலை பரிவேட்டை, குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
கலைநிகழ்ச்சிகவிஸ்வேஸ்வரர்-வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவிஸ்வேஸ்வரர்-வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாள்
10-ம் திருநாளான 15-ந் தேதி மாலை 6 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ந் தேதி மாலை சூரசம்காரம் புராண நாடகம், 9-ந் தேதி மாலை கிருஷ்ண தரிசனம் தமிழ் இதிகாச நாடகம், 10-ந் தேதி மாலை வள்ளி திருமண ஒயில் கும்மி நடன நிகழ்ச்சிகள் பெருமாள் கோவில் மேடையில் நடக்கிறது. 11-ந் தேதி மாலை வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி பெருமாள் கோவில் மேடையில் நடக்கிறது.
12-ந் தேதி மாலை நாட்டிய நாடகம், 13-ந் தேதி இன்னிசை நிகழ்ச்சி, 14-ந் தேதி மாலை சிறப்பு பட்டிமன்றம், 16-ந் தேதி திருக்குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம், 17-ந் தேதி திரை இசையில் தெய்வீக பாடல் இசை நிகழ்ச்சி நடக்கிறது.