கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருகல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ெசண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யான திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றம்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 6 மணிக்கு விளாபூஜையும், 7 மணிக்கு செண்பகவல்லி அம்மன், பூவனநாதர், பலிபீடங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, கொடி ஏற்று விழா விமரிசையாக நடந்தது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாநாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
தேரோட்டம்
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை யொட்டி வரும் 19-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், 22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.25 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், இதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைபிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.