கோவில்பட்டி நகரசபை கூட்டம்
கோவில்பட்டி நகரசபை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை சாதாரண கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் கணவனால் கைவிடப் பட்டோர் உதவித்தொகை பெறுவதற்காக, சமுதாய அமைப்பாளரின் குறிப்பின் படி புதிதாக வறுமைக் கோட்டு பட்டியலில் இணைக்க விண்ணப்பம் செய்த 227 பேரை வறுமைக்கோட்டு பட்டியில் சேர்க்க மன்றம் அனுமதி அளித்தது. கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story