கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை


கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை
x

கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ஸகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் பைபாஸ் ரோடு, சித்திரம் பட்டி ரோடு, வி. எம். எஸ். நகர், மூப்பன்பட்டி காலனி, குமரன் நகர், மகாலட்சுமி நகர், இளையரசனேந்தல் ரோடு, திலகர் நகர், காந்தி நகர் சில பகுதிகள், தட்சிணாமூர்த்தி கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு, சரமாரியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, செக்கடித்தெரு, தெற்கு பஜார் ஆகிய பகுதிகளுக்கும். மற்றும் எப்போதும்வென்றான் உப மின் நிலையத்தின் எப்போதும்வென்றான், சிவஞனபுரம், அருங்குளம், நீராவி புதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும். கடம்பூர் உப மின் நிலையத்தின் பன்னீர்குளம், வடக்கு மயிலோடை, தெற்கு மயிலோடை ஆகிய பகுதிகளுக்கு மேற்கண்ட நேரங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story