கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி கலையரங்கில் கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பில் பாரம்பரிய, பரம்பரை உணவு திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் பி. மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஆர். சாந்தி மகேஸ்வரி, கல்லூரி இயக்குனர் ஜி. வெங்கடாஜலபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ். லீலா பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் கிராமப்புற தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக தலைவர் பேராசிரியை முத்துலட்சுமி தலைமையில் மாணவர்கள்- மாணவிகள் பாரம்பரிய, பரம்பரை உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினா். பாரம்பரிய உணவுகளை மாணவ- மாணவிகள் தேர்வு செய்து வாங்கினர். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை எஸ். சாகிரா பானு நன்றி கூறினார்.