கோவில்பட்டிரெயில் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


கோவில்பட்டிரெயில் நிலையத்தை  கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டிரெயில் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காமல் ெசன்று வருகிறது. இந்த ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று ெசல்ல வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோவில்பட்டி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நகரச் செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று ெசல்ல வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், மாவட்ட குழு பரமராஜ், மாவட்ட நிர்வாக குழு சேது ராமலிங்கம், நகர துணை செயலாளர் முனியசாமி, மாவட்ட குழு ரஞ்சினி கண்ணம்மா, மாதர் சங்க செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் ராஜூ உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலைய மேலாளர் பாலமுருகனிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story