கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 3333 அகல் விளக்குகள் ஏற்றி ஆரத்தி விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 3333 அகல் விளக்குகள் ஏற்றி ஆரத்தி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆரத்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு சுற்று சுவர்களில் 3 ஆயிரத்து 333 அகல் விளக்குகள் ஏற்றி, 7 குடங்களில் சப்த நதிநீரை தெப்பக்குளத்தில் ஊற்றி, பூஜைகள் நடத்தி, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் பரமசிவம், பா.ஜனதா நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.பாலு மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story