கோவில்பட்டி சங்கரலிங்க சுவாமிகோவிலில் 108 விளக்கு பூஜை


கோவில்பட்டி சங்கரலிங்க சுவாமிகோவிலில் 108 விளக்கு பூஜை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சங்கரலிங்க சுவாமி கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி, கோடி சக்தி விநாயகர் வள்ளி- தேவசேனா சமேத கல்யாண முருகன், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. இரவு 7 மணிக்கு 108 பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story