கோவில்பட்டி யூனியன் பகுதியில் 26 அரசு பள்ளிகளில் ரூ.19 லட்சத்தில் வர்ணம் பூசி புதுப்பிக்க திட்டம்


கோவில்பட்டி யூனியன் பகுதியில்  26 அரசு பள்ளிகளில் ரூ.19 லட்சத்தில்  வர்ணம் பூசி புதுப்பிக்க திட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி யூனியன் பகுதியில் 26 அரசு பள்ளிகளில் ரூ.19 லட்சத்தில் வர்ணம் பூசி புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் சுப்புலட்சுமி, மேலாளர் முத்துப்பாண்டி, துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 31 தீர்மானங்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ள 26 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வர்ணம் பூசி புதுப்பித்திட ரூ.19.21 லட்சம் அனுமதிக்கப்பட்டது. திட்டக்குளம் பஞ்சாயத்து ரோடு மேம்பாடு செய்தல் பணிக்கு ரூ.10 லட்சம் அனுமதிக்கப்பட்டது.


Next Story