கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா
கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. விழாவிற்கு விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் எஸ். எம். பால முருகேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் எம். காளியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை கார்த்திகேஸ்வரி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி இயக்குனர் ஜி. வெங்கடாஜலபதி, தமிழ் துறை பேராசிரியர் தங்கமாரியப்பன், வணிக மேலாண்மை துறை தலைவர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் வில்லுப்பாட்டு, பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை லதா தேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story