கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கரிசல் எழுத்தாளர் கி.ரா.வின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா. சிலைக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், பள்ளி மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையில் பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், கிளை செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமையில் மாணவிகள் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பொது அறிவையும், கலைத்திறமையையும் வளர்த்துக் கொள்ளவும், வாசிப்பு பழக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருப்பமான துறைகளை தேர்வு செய்து சாதனைகள் புரியவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கி.ரா.வின் நினைவரங்கத்தை பார்வையிட்டனர்.


Next Story