ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா
x

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே நல்லூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி நல்லூர் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் பாபநாசம் கலைக்கோவில் இசை பள்ளியை சேர்ந்த மாணவிகள் ராதை- கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்ற கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து உறியடி உற்சவம் நடைபெற்றது. அதேபோல் பாபநாசம் அருகே உத்தாணியில் கிருஷ்ண ஜெயந்தி ஆன்மிக அறிவியல் விழா நடைபெற்றது. நல்லூர் உத்தம விநாயகர் கோவிலில் இருந்து கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது கோலாட்டம் சிலம்பாட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.


Related Tags :
Next Story