கிருஷ்ணர் கோவில் விழா


கிருஷ்ணர் கோவில் விழா
x

கிருஷ்ணர் கோவிலில் விழா நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியில் ராதை, கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிலம்பாட்டம், புலியாட்டம், கோலாட்டம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன் ராதை, கிருஷ்ணர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வழுக்கு மரம் ஏறினர். இறுதியாக வெற்றி பெற்ற வீரருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story