கிருஷ்ணகிரி 14 பேர் மீது வழக்கு


கிருஷ்ணகிரி 14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Sept 2023 1:00 AM IST (Updated: 7 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி அருகே ஜாகீர் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் ராமு (வயது 52). கூலித் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்குமார் (23) என்பவரும், சரத்குமார் (20) என்பவரும், பொது இடத்தில் மது போதையில் இருந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் சிலர் தட்டி கேட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் சிலர் தினேஷ்குமார், சரத்குமாரை தாக்கினார்கள். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக ராமு அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல மற்றொரு தரப்பில் விஜி (22) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story