கிருஷ்ணகிரி என்ஜினீயர் தற்கொலை
சேலத்தில் ஒரு விடுதி அறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலத்தில் ஒரு விடுதி அறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் நிறுவனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தம்மண்ணபள்ளியை சேர்ந்தவர் காரியப்பா. இவருடைய மகன் முனுசாமி (வயது 29). என்ஜினீயர். இவர் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் சேலம் பெரமனூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது சகோதரர் பார்த்திபன் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் முனுசாமி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் மறுமுனையில் பதில் இல்லை.
தற்கொலை
இதையடுத்து அவரது தந்தை காரியப்பா மற்றும் உறவினர்கள் நேற்று காலை பெரமனூர் வந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்றனர். அப்போது அவரது அறை உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.