கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
கரூர்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சேதுமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் எதிர்புறம் உள்ள மயான கொட்டகையை 6-வது வார்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பொதுமக்கள் சென்று வர சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை வசதி செய்து தர வேண்டும், அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விளக்கு அமைக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story