சிவசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா
தேசூர் பேரூராட்சியில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் பேரூராட்சி அய்யாசாமி தெருவில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை திருவிழா நடந்தது.
காலையில் வள்ளி, தெய்வானை, சிவசுப்பிரமணியர், அங்காள பரமேஸ்வரி, தூண்டுகை விநாயகர், துணைவியாருடன் உள்ள நவகிரகங்கள் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீர் ஆகியவை மூலம் அபிஷேகம் நடந்தது.
பின்னர் முருகனுக்கு சந்தன காப்பு செய்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் சேவார்த்தி தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் கோவில் பிரசாதம் வழங்கினார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்தனர்
பின்னர் எலும்பிச்சை பழத்தில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினார்கள். குடும்பப் பிரச்சினை, குழந்தை வரம், .வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும், விவசாயத்தில் மகசூல் கிடைக்க வேண்டும், நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்று பக்தர்கள் வேண்டி கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நித்திய சொற்பொழிவாளர் வெற்றிவேல், கோவில் நிர்வாகி டி.எஸ்.சிவா ஆகியோர் செய்து இருந்தனர்.