வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
வேலூர்
காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதேபோல் நேற்று ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு அதிகாலை முதலே அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு விபூதி காப்பு செய்து, தீபாராதனை நடந்தது.
இதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தி, விபூதி காப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
Related Tags :
Next Story