கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

நம்புதாளையில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா நம்புதாளையில் வன்னியர் படையாட்சி கிராமத்திற்கு பாத்தியமான வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் நெடுங்குடி கைலாசநாதர் கோவில் ஸ்தானிகம் கணேச குருக்கள் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது.யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர்.தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமி, அம்பாள் கோபுர கலசங்களிலும் 3 நிலை கொண்ட ராஜ கோபுரத்திலும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.விழாவில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வன்னியர் படையாட்சி சமூகத்தினர் சார்பில் கிராம மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலை புதுவயல் சக்தி சிற்பக் கலைக்கூடம் ஸ்தபதி கருப்பையா தலைமையிலான குழுவினர் புனரமைப்பு செய்துஇருந்தனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.கும்பாபிஷேக விழாவில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர்கள் முகமது முக்தார், கார்த்திகேயன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் முத்துராக்கு, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பி.கே. பிச்சைக்கண்ணு, வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், பா.ஜனதா .மாவட்ட தலைவர் கதிரவன், முன்னாள் யூனியன் தலைவர் குட்லக் ராஜேந்திரன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி, கிராம தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பெரியசாமி, துணைச்செயலாளர் ராமலிங்கம், துணைத் தலைவர் கருப்பையா, பொருளாளர் பழனி, கிராம நிர்வாகி குமரேசன், நம்புதாளை ஒன்றிய கவுன்சிலர் சுமதி, முத்து ராக்கு, ஊராட்சி தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம், அ.தி.மு.க. பிரமுகர் நம்புதாளை பி.கே.பி.செல்வம் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வன்னியர் படையாட்சி சமூகத்தினர், கிராமத்தார்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடு களை நம்பு தாளை வன்னியர் படையாட்சி கிராமத்தினர் செய்து இருந்தனர்.


Next Story