கூடலூர் சாமிவாய்க்காலை சீரமைக்க வேண்டும்


கூடலூர் சாமிவாய்க்காலை சீரமைக்க வேண்டும்
x

கூடலூர் சாமி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

தேனி

கூடலூர் பகுதி விவசாயிகள் மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் தென்றல் சரவணன், செயலாளர் கோட்டூர் ராஜா, மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் ஆகியோர் கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் வெட்டுக்காடு, கப்பா மடை, தாமரைகுளம், ஒட்டாண்குளம், சாமிவாய்க்கால், பி.டி.ஆர்.வட்டம், பாரவந்தான், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கூடலூர் விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நாற்றங்கால் அமைத்து உழவு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே ஆண்டுதோறும் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பே பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளே தண்ணீர் வரும் வாய்க்கால்களை தூர்வாரி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சாமி வாய்க்கால் சீரமைக்கப்படாததால் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதையை அடைத்துள்ளது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே சாமி வாய்க்காலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story