நாராயண பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும்


நாராயண பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூர் நாராயண பெருமால் கோவில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

நாங்கூர் நாராயண பெருமால் கோவில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாராயண பெருமாள் கோவில்

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள நாராயண பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் நாங்கூர், பார்த்தன் பள்ளி, திருநகரி, அண்ணன் கோவில், கீழச்சாலை மற்றும் திருமணி கூடம் ஆகிய பகுதிகளில் இருந்து 11 பெருமாள் எழுந்தருளும் கருட சேவை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் 11 திவ்யதேச பெருமாள் கோவில்களில் தலைமை பீடமாக நாராயண பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

திருப்பணிகள் நிறைவு

பெருமாள், தாயார், வாகன மண்டபம், மடப்பள்ளி, ராஜகோபுரம், சுற்றுச்சுவர் மற்றும் நந்தவனம் உள்ளிட்ட திருப்பணிகள் அரசு நிதி உதவி, உபயதாரர்கள், மற்றும் கிராமமக்களின் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனாலும் இதுவரை கோவிலின் குடமுழுக்கு தேதி முடிவு செய்யப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.

குடமுழுக்கு

தற்போது குடமுழுக்கு நடைபெறாமல் இருப்பதால் பக்தர்கள் கோவிலில் யாகங்கள் உள்ளிட்ட பூஜைகளை செய்ய முடியாமல் உள்ளனர். இக்கோவிலின் திருப்பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் குடமுழுக்குக்கான நாள் குறிக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே பக்தர்களின் நலனை கருத்தில்ச் கொண்டு உடனடியாக குடமுழுக்குக்கான தேதியை முடிவு செய்து ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story