கூடங்குளம் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது


கூடங்குளம் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
x

கூடங்குளம் 1-வது அணு உலையில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் 1-வது அணு உலையில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிதியுதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந் தேதி முதலாவது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மீண்டும் மின்உற்பத்தி

இதனை தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 260 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


Next Story