கூடங்குளம் பள்ளி மாணவி சாதனை
தென் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் கூடங்குளம் பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
கூடங்குளம்:
வள்ளியூர் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தென் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் கூடங்குளம் ஹார்வேர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். மாணவி விவேகா சீனியர் மாணவிகளுக்கான போட்டிகளில் ஈட்டி எறிதலில் முதலிடத்தையும், தட்டு வீசும் போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் செல்வராணி, பயிற்சியாளர் சுந்தர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire