சிறப்பாக பணியாற்றிய 36போலீசாருக்கு பாராட்டு


சிறப்பாக பணியாற்றிய 36போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 36போலீசாருக்கு பாராட்டு சான்றுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 36 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டு சான்று வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (தலைமையிடம்), லயோலா இக்னேசியஸ் (சைபர் குற்றப்பிரிவு), விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story