விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு


விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், பணி நிறைவு பெற்ற மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா குன்னூரில் நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி (குன்னூர்), நந்தினி (ஊட்டி) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் பணி நிறைவு பெற்ற ஆசிரியைகள் சரோஜா, யசோதா, அமுத குமாரி ஆகியோருக்கு பண முடிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் விருதுகள் பெற்ற ஆசிரியர்கள் சிவசங்கரன், ராதா, ரீனா, நிர்மலா, புஷ்பா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், குன்னூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சங்க தலைவர் ரீனா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நிர்மலா நன்றி கூறினார்.


Next Story