பண்ணை மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பண்ணை மெட்ரிக் பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
திண்டுக்கல்
வேலூர் தொழில்நுட்ப கல்லூரியில், மாநில அளவிலான ரோபோடிக்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அதில் திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆஷிக், பிரித்திகா, ஷிவானி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேலும் இப்பள்ளியை சேர்ந்த மாதேஷ் கண்ணன், கிரித்திஷ், சர்வேஷ், மகேஷ் பூபதி ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு பதக்கங்கள், பரிசு கோப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பண்ணை பள்ளிகளின் தலைவர் ஸ்ரீதர், துணை தலைவர் சந்தோஷ், தாளாளர் லீனாஸ்ரீ ஸ்ரீதர் மற்றும் பள்ளி முதல்வர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் கவிதா சமயேந்திரன், தனலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story