ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி அருகே பூனைக்குட்டை பள்ளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி டிக்ஸ்னரி (அகராதி) புத்தகங்களை பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story