கராத்தே பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


கராத்தே பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கராத்தே பயிற்சியில் வெற்றி பெற்ற கழுகுமலை பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

தென்காசி

கழுகுமலை:

கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது. சோபுகாய் கோஜிரியோ டூ இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டயத்தை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மதுரை மாவட்ட கராத்தே பயிற்சியாளர் கார்த்திக் கலந்து கொண்டு பெல்ட் எக்சாமை நடத்தினார். இதில் நேத்ரா ஸ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமியின் கழுகுமலை மற்றும் திருவேங்கடம் கிளையை சேர்ந்த 17 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அவர்களுக்குரிய பெல்ட் எக்சாம் திறமையை வெளிப்படுத்தி எல்லோ-கிரீன் பெல்ட் பெற்று தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களை நேத்ரா அகாடமி நிர்வாகி ரோஹிணி மற்றும் ஆசிரியர்கள் தமிழ், பார்வதி உள்பட பலர் பாராட்டினர். பயிற்சி ஏற்பாடுகளை கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் செந்தில் செய்திருந்தார்.


Next Story