உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் கிடந்த பணப்பையை போலீசிடம் ஒப்படைத்த 2 விவசாயிகளுக்கு பாராட்டு
உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் கிடந்த பணப்பையை போலீசிடம் ஒப்படைத்த 2 விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். விவசாயிகளான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தியாகதுருகத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே வந்தபோது, பை ஒன்று சாலையில் கேட்பாரற்று கிடந்தது. இதைபார்த்த விவசாயிகள் 2 பேரும் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த பணப்பையை உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்ததோடு, அதனை உரியவரிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். சாலையில் கிடந்த பணப்பையை ஒப்படைத்த விவசாயிகள் வேல்முருகன், குமார் ஆகியோரின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story