தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு
தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பழனிராசு. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகளான நிவேதா, இந்தோ நேபாள் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய நிவேதிதாவை, போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரை க.கொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வும் பாராட்டினார். இது குறித்து நிவேதிதா கூறுகையில், இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போதுதான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், போட்டியில் இலக்கை 12.58 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றதாகவும், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம், என்றும் கூறினார்.
Related Tags :
Next Story