அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு


அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
x

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்திருக்கும் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நாடார்வலசை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் பவதாரணி என்ற மாணவிக்கு பாராட்டு விழா நேற்று சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவினை முன்னால் மாணவர் சங்கத்தினர் நடத்தினர். தலைவர் லுக்மான் ஹக்கீம், செயலர் மேகநாதன், பொருளாளர் ஜெய்லானி மற்றும் இந்து சமூக தலைவர் பாஸ்கரன், ஜமாத் தலைவர் பக்ருல் அமீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் ஆகியோர் சார்பில் மாணவிக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியை தேன்மொழி முத்து நாகலிங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டு வாழ்த்தி கௌரவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவிக்கு வழிகாட்டிய ஆசிரியர் ஆறுமுகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இறுதியாக மாணவி பவதாரணி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரையாற்றி ஆற்றினார் மாணவியின் பெற்றோர் சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது


Next Story