கேரம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


கேரம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

கேரம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி மாயனூர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், மேட்டு திருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி முதல் இடத்தை பெற்றனர். இதன் மூலம் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் பரிசுகள் வழங்கியும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராசு, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், அமுதா ஆகியோரையும் பாராட்டினார்.


Next Story