தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
சிறந்த பள்ளிக்கான விருது அறிவிக்கப்பட்டதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
தென்காசி யூனினுக்கு உட்பட்ட கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழப்பாவூர் யூனியன் புல்லுக்காட்டுவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலநீலிதநல்லூர் யூனியன் பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், சிறந்த பள்ளி என்ற விருதை பெற்ற கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வருகை தந்த தென்காசி யூனியன் தலைவர் சேக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர். தொடர்ந்து, அந்த பள்ளியின் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் எடுக்கப்படும் என தென்காசி யூனியன் தலைவர் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story