நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் கலெக்டருக்கு பாராட்டு


நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் கலெக்டருக்கு பாராட்டு
x

நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் கலெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்

மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்திலேயே நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் பிரிவில் சாதி சான்றிதழ் முதன் முதலாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம், மலையப்ப நகரை சேர்ந்த கோகிலா என்பவருக்கு நரிக்குறவர் என்ற பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் கடந்த 25-ந்தேதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் 15 பேருக்கு நேற்று அந்த சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவர் என்ற பழங்குடியினர் இன வகுப்பு என்ற சாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நரிக்குறவர் இன மக்களும், அந்த சாதி சான்றிதழ் பெற்றவர்களும் நேரில் வந்து சந்தித்து இனிப்பு கொடுத்தும், பாசிமாலை, சால்வை அணிவித்தும் பாராட்டி, நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் அவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சத்திய பால கங்காதரன் உடனிருந்தார்.


Next Story