ரோட்டில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு


ரோட்டில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரோட்டில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கடந்த மாதம் 17-ந்தேதி தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு நகைக்கடை முன்பு யாரும் உரிமை கோராத நிலையில் ஒரு பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த நகைக்கடை உரிமையாளர் ஞானபால் அந்த பையினை எடுத்து பார்த்ததில் அதில் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் பணம் மற்றும் ஜவுளிக்கடையில் வாங்கப்பட்ட புதிய சேலை ஆகியவை இருந்தது. உடனடியாக ஞானபால் அதை உரியவரிடம் ஒப்படைக்கக்கோரி தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து பணத்துடன் பையை தவறவிட்டது யார்? என தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்துடன் பையை தவறவிட்டது தூத்துக்குடியில் நகைக்கடை நடத்தி வரும் ஆனந்த சுப்பிரமணியன் என்பது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஞானப்பாலை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, ஞானபால் மூலமே ஆனந்த சுப்பிரமணியனிடம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் புதிய சேலை ஆகியவற்றை வழங்கினார். மேலும் ஞானபாலின் நேர்மையை பாராட்டி அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு சால்வை அணிவித்து கவுரவித்தார்.


Next Story