வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு
வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
திருவாரூர்
திருப்பூர் அவினாசியில் நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் பிரிவில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் சசிக்குமார் முதலிடம் பெற்றார். இதேபோல் வலுதூக்கும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் முகிலன், விமல்ராஜ், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்கனை திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தி.மு.க. மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மீனாட்சி சூரியபிரகாஷ், நகரசபை உறுப்பினர் செந்தில், வலுதூக்கும் சங்க மாநில துணை செயலாளர் விமல்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story