கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு


கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு
x

ஓமலூர் அருகே ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி ஜோடுகுளி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 பேர் வெல்டிங் எந்திரம் மூலம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் உரிமையாளர் செல்வம் சாதுரியமாக செயல்பட்டு ஏ.டி.எம். மைய ஷட்டரை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையனையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உடனடியாக கைது செய்தனர்.

இந்தநிலையில் கொள்ளையர்களை பிடிக்க உதவிய வீட்டின் உரிமையாளர் செல்வம் மற்றும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு பாலகுமார், நெடுஞ்சாலை ரோந்து பணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பிரபாகரன், தலைமை ஏட்டு இந்து ராஜ் ஆகியோரை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னைக்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.


Next Story