விநாயகர் சதுர்த்தியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு
விநாயகர் சதுர்த்தியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த இடங்களிலும், பிற இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் மேற்கொண்டு எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலான மாவட்ட போலீசார் மிகவும் சிறப்பாகவும், பொறுப்புடனும் கொட்டும் மழையிலும் சோர்வடையாமல் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர் வரை ஒவ்வொருவருக்கும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி பாராட்டு தெரிவித்து பேசி வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story