முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, வாலிபால், கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடிய அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். அவர்களை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 100 மீட்டர் ஓட்டத்தில் போலீஸ்காரர் இளஞ்செழியனும், நீளம் தாண்டுதலில் போலீஸ்காரர் பாலாஜியும் முதலிடம் பிடித்தனர். வாலிபால் போட்டியில் போலீஸ்காரர் குரு தலைமையிலான அணி முதலிடம் பிடித்தது. பெண் போலீஸ் ஏட்டு மகாலட்சுமி பேட்மிண்டன் போட்டியில் முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான 1,500 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதலில் பெண் போலீஸ் சுகன்யா முதலிடம் பிடித்தார். மேலும் ஆண்களுக்கான கபடி போட்டிகளில் போலீஸ் அணிகள் முதல் மற்றும் 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story