மாணவர்களுக்கு பாராட்டு


மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புதிய கண்டுபிடிப்புக்காக மாணவர்களுக்கு பாராட்டப்பட்டனர்.

திருநெல்வேலி

சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சார்பில் எம்பெடெட் அன்ட் ஐ.ஓ.டி. அப்ளைட் ஆய்வக மாணவர்கள் கிளாட்சன் ஜோயல் ராஜா, சாம் சார்லஸ், தங்கவேல், டோனல் ஆகியோர் குழுவாக கலந்து கொண்டனர். இந்த மாணவர் குழுவினர் மீன் பண்ணையில் மீன்வளத்திற்கான அடிப்படை ஸ்மார்ட் மிதவையை கண்டுபிடித்தனர். இதன் மூலம் மீன்களுக்கு உணவு, மாசு படிந்த தண்ணீரை கண்டறிதல் உள்ளிட்டவைகளை மிதவை கண்டுபிடிக்க உதவும்.

இந்த கண்டுபிடிப்புக்காக மாணவர்களுக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ், ரூ.8 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்த பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரையும், பேராசிரியர்கள் லஷ்மிநாராயணன், பெரிஸ்கா உள்ளிட்டவர்களை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.


Next Story