கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மணலி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மன்னார்குடி அரசு மாதிரி பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான குழு அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டனர்.இதில் குறுவட்ட அளவிலான பூப்பந்து மேல்மேலோர் பிரிவில் முதலிடமும், கீழோர், மேலோர் பிரிவில் 2-ம் இடமும், கைப்பந்து போட்டியில் மேலோர் பிரிவில் முதலிடமும், வளையப்பந்து இரட்டையர் பிரிவில் கீழோர் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும். மேல்மேலோர் பிரிவில் இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் முதலிடமும் பெற்றனர். மேலும். பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்சி அறித்த உடற்கல்வி இயக்குநர் அனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியை. அஸ்வியா ஆகியோருக்கு பள்ளி செயல் அலுவலர் ஆறுமுகம் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை மாலினி மற்றும் அனைத்து ஆசிரியைகளும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story