வெற்றி பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
வெற்றி பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.36 ஆயிரம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கும். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story