வெற்றி பெற்ற தேத்தாக்குடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற தேத்தாக்குடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
x

வெற்றி பெற்ற தேத்தாக்குடி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வட்டார அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் வேதாரண்யம் சுப்பையா பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தேத்தாக்குடி தெற்கு கைலாச கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு 42 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் விவேகரத்தினம், பொருளாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் மற்றும் பலர் பாராட்டினர்.

Next Story