சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு
இசை போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர்
காரியாபட்டி,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பாக கலைத்திருவிழா போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதில் வீணை வாசித்தல் போட்டியில் மாணவி காயத்ரி மாநில அளவில் முதலிடத்தை பெற்றார். பரதநாட்டியத்தில் மாணவி பிரியதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாணவி சாதனா 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர். செவ்வியல் இசையில் மாணவி நிஷா மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். இசை போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்த பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின்பேரில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் ஆர்.கே.செந்தில் விருது, பரிசுத்தொகை, சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் ஸ்ரீ சாமிநாத குருகுலத்தின் ஆசிரியர் பாலகணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story