வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு


வெற்றி பெற்ற போலீசாருக்கு பாராட்டு
x

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராடினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு கபடி, பேட்மிட்டன், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் இனி வருகிற போட்டிகளில் வெற்றி பெற அறிவுரைகளை வழங்கினார்.


Next Story