சாலையில் கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
சேரன்மாதேவியில் சாலையில் கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த பெண்ணை போலீசார் பாராட்டினர்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 48). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலையில் சேரன்மாதேவி- களக்காடு ரோட்டில் நடந்து சென்றபோது சாலையில் கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்தார். பின்னர் அதனை சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில், அந்த சங்கிலியானது சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேனின் மகளுக்கு சொந்தமானது என்பதும், அவர் சாலையில் நகையை தவற விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாகீர் உசேன் மற்றும் அவருடைய மகளை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக நேர்மையுடன் வழங்கிய மாரியம்மாளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன் பரிசு வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story