காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி
காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பவானி
காவிரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இருகரைகளையும் தொட்டபடி ஓடியது.
இதனால் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது.
பரிகாரம் செய்ய தடை நீக்கம்
தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்துள்ளது. இதனால் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு்ள்ளது. மேலும் ஆற்றில் புனிதநீராட இருந்த தடையும் நீக்கப்பட்டது.
இதனால் பவானி கூடுதுறைக்கு நேற்று பவானி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பரிகாரம் செய்தனர்.