கங்கையம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா
சந்தவாசல் கங்கையம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் உள்ள கங்கையம்மன் கோவிலில் இன்று வைகாசி முதல் வெள்ளிக்கிழமை வசந்த உற்சவத்தை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் கங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.
பிற்பகலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் கொண்டு வந்து கோவில் முன்பு கொப்பரையில் ஊற்றி, பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
இரவில் அம்மன் திருவீதி உலா மேளதாளம், வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.
Related Tags :
Next Story