குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றத்தால் குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல்:
கடல் சீற்றத்தால் குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றம்
குமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக இருக்கும். ஆனால் தற்போது மே மாதமே கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
மேலும் காற்றின் திசை மற்றும் வேக மாறுபாடு காரணமாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்படுகிறது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீ்ன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்றும் கடல் சீற்றம் அதிகமாகவும், கடல் அரிப்புமாக இருந்தது. இதனால் குளச்சல், கொட்டில்பாடு, கோடிமுனை, குறும்பனை மீனவ கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் மீனவர்களும் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.