குலசை தசரா விழாவில் ஸ்டெர்லைட் சார்பில் குடிநீர் வினியோகம்
குலசை தசரா விழாவில் ஸ்டெர்லைட் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகத்தை போக்க, குலசேகரன்பட்டினம் புறநகர் சாலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சாரபில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனை ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஏ.சுமதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் காப்பர் தலைமை மருத்துவர் அலுவலர் டாக்டர் கைலாசம், சட்டப்பிரிவு தலைவர் நீரஜ், நிர்வாகப் பிரிவு தலைவர் ஜெயா, வர்த்தக பிரிவு அலுவலர் அருணாச்சலம், நிதிப் பிரிவு அலுவலர் கார்த்தீஸ்வரன், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தலைவர் தியாகராஜன், நுகர்வோர் பேரவை சங்க செயலாளர் கல்லை ஜிந்தா, நுகர்வோர் பேரவை துணைசெயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் நாள் முழுவதும் அங்கிருந்து கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் விநியோகம் செய்தனர். இதனை பெற்று கொண்ட பக்தர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.